ஜூலை மாத சிறப்புப்பரிசை பெறுபவர்


தமிழில் பதிவு எழுதும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம் . தமிழ்10 இணையத்தளம்ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும்வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச்சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அதுமிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும்விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
ஆம் தமிழ்10 தன் வெற்றியை பதிவர்களிடமும் பகிர்ந்து கொள்ளப்போகிறது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தரமான பதிவுகளை எழுதுங்கள் , அவற்றை எங்கள் தமிழ்10 வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு தமிழ்10 தளத்தில் அதிக ஓட்டுக்கள் கிடைத்திருந்தால் (அம்மாதத்தில் சராசரியாக விழுந்த ஓட்டுக்களில்) உங்களுக்கே அந்த சிறப்புப் பரிசு ( 500 ரூபாய் ) .உங்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் உண்மையிலேயே சிறந்த பதிவுகளுக்கு நீங்களும் ஓட்டளிக்க வேண்டும் .(ஏன் எனில் நீங்கள் சக பதிவரின் படைப்பை மதித்தால் தான் அவரும் உங்களின் படைப்பை மதித்து ஓட்டளிப்பார் ).இன்னும் என்ன யோசனை சிறந்த பதிவுகளை எழுதுங்கள் அவற்றை tamil10 தளத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் , சிறந்த படைப்புகளை ஊக்கிவித்து ஓட்டளியுங்கள் .சிறப்புப்பரிசை தட்டிச் செல்லுங்கள்
தமிழ்10 தளம் சிறந்த பதிவர்களை ஊக்கிவிக்கும் விதமாக வாரம் ஒரு பதிவருக்கு கிரீடம் வழங்கி கவ்ரவிக்கிறது .இந்த நிரலியை உங்கள் தளத்தில் இணைத்து சக பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள் .இது ஒருவகையில் உங்கள் டிராபிக்ஐயும் ஏற்ற வல்லது ஏன் எனில் கிரீடம் பெறும் பதிவராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது அந்த வாரம் முழுவதும் நீங்கள் அனைத்து வலைத்தளங்களிலும் ஒளிர்வீர்கள் .இது உங்கள் பதிவின் புகழை பதிவர்களை மட்டுமல்லாது அனைத்து மட்ட வாசகர்களிடமும் கொண்டு சேர்க்கும் . நிரலியை உங்கள் தளத்தில் சேர்க்க அதிகம் சிரமப்பட வேண்டாம் .கீழே உள்ள பொத்தான் ஐ அழுத்தி பின்பு save என்று கொடுக்கவும் உங்கள் தளத்தில் தானாகவே கிரீடம் நிரலி save செய்யப் பட்டுவிடும் இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான் உங்கள் வலைத்தளத்தின் லே அவுட் பகுதிக்குச் சென்று சாவே செய்யப்பட்ட தமிழ்10 நிரலியை blogspost இற்கு மேலே இழுத்து விடவும் .தமிழ்10 நிரலியை இணைத்ததன் மூலம் தமிழ்10 குடும்பத்தில் நீங்களும் ஒருவராகிறீர்கள்