Archive

Archive for August, 2009

இவ்வார கிரீடம் பெறுபவர் சூர்யா கண்ணன்

August 31st, 2009 No comments

Blog name http://www.suryakannan.blogspot.com/

1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
நான் எந்த கணினி வகுப்பிற்கும் செல்லாமல், சுயமாக கற்றுக் கொண்டவன். தினசரி கற்று கொண்டிருப்பவன். எனக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வமுள்ளவன்.
வாழ்க்கைப் போராட்டத்தில், எத்தனையோ இடர்களையும், தடைகளையும் தாண்டி சுயமாக தொழில் செய்து வருகிறேன்.

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
நான் அறிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்வதில் ஒரு ஆத்ம திருப்தி!

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
சக பதிவர்களின் விமர்சனமே என்னை இந்த அளவிற்கு வார்த்தெடுத்திருக்கிறது.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
நன்மை: பதிவுலக நண்பர்கள்.
தீமைகள்: சரியான உறக்கமின்மை.

5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
தமிழ் நெஞ்சம்.
பாமரன்.
ஷிர்டி சாய்தாசன். (சுதந்திர இலவச மென்பொருள்)
திருமதி. மேனகா சத்யா (http://sashiga.blogspot.com)
கும்மாச்சி மற்றும் பலர்.

6-உங்கள் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளாகவே இருக்கிறதே ?.இது உங்கள் உங்கள் துறை மீது நீங்கள் வைத்து இருக்கும் காதலாலா ?
என் மனைவி அடிக்கடி சொல்வது. “கணினியையே கட்டிட்டு அழுங்க,”
ஆனால் அவ்வப்போது அவர் தரும் பாராட்டுகளே என்னை வளர்த்திருக்கிறது.

7-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…

பத்திரிக்கை, தொலைக்காட்சி ஐ விட ஒரு பெரிய சக்தியாக நிச்சயமாக உருவெடுக்கும். (கருத்து சுதந்திரம் உள்ளவரை இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று..,)

8-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
நீங்கள் எழுதப்போகும் கருத்தில் நீங்கள் தெளிவாக இருந்தால், தைரியமாக எழுதுங்கள். உங்கள் பதிவுகள் வாசகர்களுக்கு பயன்படும்படி இருக்கட்டும்.

9 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
தமிழ்10 தளம் பதிவுகளை பகிர்வதோடு மட்டுமல்லாமல், பதிவர்களை ஊக்குவிக்கும் தளமாகவும் உள்ளது. இத்தளத்தில் எனது பதிவுகளை இடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?

பெரிதாக ஒன்றுமில்லை. எப்பொழுதும் என்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் எண்ணம் போலவே தொடர்ந்தும் இது போன்ற பதிவுகளை எழுத தமிழ்10 தளத்தின் வாழ்த்துக்கள்

“இவ்வார கிரீடம்” பெறுபவர் குகன்

August 25th, 2009 No comments
இவ்வார கிரீடம் பெறும் பதிவராக பல்சுவை வலைப்பதிவர் (http://www.guhankatturai.blogspot.com/) குகன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்
பட்டுள்ளார் .அவருடன் ஓர் சிறு நேர்காணல் கீழே

1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?

நகைச்சுவை, நையாண்டி, கட்டுரை, புத்தக பார்வை, காதல்….என்று எல்லாம் சேர்ந்த ஒரு கலவை. இது இருக்கும், கிடையாது என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் இருக்கும் என்ற பெயரில் ஒன்றும் உருப்படியாக இருக்காது :(

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
என் எழுத்து திறனை மெருக்கேற்றிக் கொள்ளவும். மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும்.

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
Free publicity என்று நினைத்துக் கொள்வேன்

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?..
பலர் இவ்வளவு நன்றாக
எழுதுகிறார்கள் என்ற அடையாளமும், என் எங்கு இருக்கிறேன் என்ற உண்மையும் தெரிந்துக் கொண்டேன்.
தீமைகள் என்று எதுவுமே இல்லை.

5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
கேபிள் சங்கர்
லக்கி லுக்
நர்சிம்
முகில்
சிவராம் (பைத்தியக்காரன்)

6-தற்போது வலை உலகில் பெருகி வரும் கருத்து மோதல்கள் பற்றி ?
கருத்து மோதல்கள் வரவேற்க தக்கது தான். ஆனால், இப்போது என்ன கருத்து மோதல் நடக்கிறது ?

7-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
அறிவுரை கூறும் அளவிற்கு நான் வளரவில்லை.

8 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
என்னை போன்ற தெரியாத பதிவர்களை கூட “கீரிடம்” சூட்டி அழகு பார்க்கும் தளம்.
9 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
நல்ல எழுத்தாளன் என்ற பெயர் எடுப்பது.

உங்கள் லட்சியம் வெற்றி பெற தமிழ்10 தளத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

இவ்வார கிரீடம் பெறுபவர் இனியவன்

August 16th, 2009 No comments

தமிழ்10 .காம் வழங்கும் “கிரீடம்” விருதை இவ்வாரம் பெறுபவர் இனியவன் .
சமூக மற்றும் பொது விடயங்களை எழுதும் திரு .இனியவனின் இணையத்தள முகவரி
www.iniyavan.com

கீழே இனியவனின் ஓர் சிறிய பேட்டி

1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?

என் பெயர் என்.உலகநாதன். நான் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவன். நான் கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் Finance Controller ஆக வேலை பார்த்து வருகிறேன். அதற்கு முன்பு இராணிப்பேட்டையில் வேலை பார்த்தேன்.நான் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். தினமும் காலையில் நடை பயிற்சி, யோகா மாலையில் 1 மணி நேரம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவன். வாரத்தில் ஒரு நாள் விரதம். வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் ஆண்டவன் நல்ல உடல் நிலையோடு என்னை வைத்திருக்கிறான் என நம்புகிறேன். நான் ஒரு கிரிக்கெட் வீரனாக ஆக ஆசைப்பட்டேன், பிறகு நல்ல பாடகராக ஆசைப்பட்டேன். கடைசியில் நன்கு படித்தால் மட்டுமே உறுப்பட முடியும் என நினைத்து நன்றாக படித்தேன். என் அப்பா அம்மா எப்படி என்னை வளர்த்தார்களோ அதே நல்ல பழக்க வழக்கங்களுடன் என் பிள்ளைகளை வளர்க்க முயன்று வருகிறேன்.

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?

நான் சிறு வயதிலே கவிதை, துணுக்கு,கேள்விகள் என அனைத்து பத்திரிக்கைகளிலும் எழுதியிருக்கிறேன். நான், நண்பர்களுடன் “சலங்கை” எனும் பத்திரிக்கை நடத்தியுள்ளேன். காலேஜ் மேகசினில் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன். கல்லூரியில் நடந்த சிறு கதை போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். என்னுடைய கதை கல்லூரி மேகசினில் வெளி வந்துள்ளது. நான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதிய முதல் கதையே 17.06.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் சென்னை எடிசனில் வெளி வந்துள்ளது.படிப்பு மற்றும் அலுவல் காரணமாக பல வருடங்கள் காரணமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் மனதின் ஒரு மூலையில் எழுத்து ஆசை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வலைப்பூ அறிமுகமானதும் நான் மீண்டும் இப்போது எழுத துவங்கி உள்ளேன்.

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?

எப்போதுமே விமர்சனங்களை வரவேற்பவன் நான். விமர்சனங்கள் அதிகம் வந்தால்தான் நாம் நம்மை திருத்திக்கொள்ள முடியும். அதனால், அனைத்து விமர்சனங்களையும் என்னை, என் திறமைகளை உயர்த்திக்கொள்ள பயன்படுவைகளாகவே எடுத்துக்கொள்வேன்.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.

நன்மைகள்

:
அலுவலக வேலை

, எனது உடற்பயிற்சிகள், யோகா என குறுகிய வட்டத்துக்குள் இருந்த என் வாழ்க்கை இப்போது பதிவுலகத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. அதனால், இப்போது நிறைய படிக்கிறேன். நிறைய எழுதிகிறேன். நிறைய கதைகள் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரே மன நிலையுள்ள நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
தீமைகள்

:
இதுவரை எதுவும் இல்லை

.
5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?

பிடித்த பதிவர்கள் ஏழு பேர் என மாற்றலாம் என்றால்,

01.

பரிசல்காரன்
02.

யுவகிருஷ்ணா (லக்கிலுக்)
03.

நர்சிம்
04.

கோவி. கண்ணன்
05.

எவனோ ஒருவன்

6. கேபிள் சங்கர்
7. ஆதிமூல கிருஷ்ணன்

6-தற்போது வலை உலகில் பெருகி வரும் கருத்து மோதல்கள் பற்றி ?

ஆரோக்கியமான கருத்து மோதல்களை வரவேற்கிறேன். தேவையில்லாத, அடுத்தவர்கள் மனம் புண்படியான கருத்து மோதல்களை வெறுக்கிறேன்.
7-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?

உங்கள் வலைப்பூவிற்கு நீங்கள்தான் ஆசிரியர். கூடுமானவரை நல்ல விசயங்களை, அடுத்தவர்களுக்கு பயன்படும்படியாக எழுதுங்கள். ஆதாரமில்லாத விசயங்களையும், அடுத்தவர்களை புண்படுத்தும் விதமான விசயங்களையும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

8 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து?
குறுகிய காலத்தில் நிறைய வாசகர்களை இழுத்த வலைத்தளம். தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தமிழ்10 ஆற்றும் சேவை பாராட்டக்கூடியது. நிறைய புதிய பதிவர்களை தேர்ந்து எடுத்து பரிசு கொடுத்து ஊக்கபடுத்தும் செயல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதற்கு தமிழ்10க்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
9 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?

நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும். எல்லா பத்திரிக்கைகளிலும் என் கதை வர வேண்டும். ஒரு கம்பனி ஆரம்பிக்க வேண்டும். நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டும்.

உங்கள் இலட்சியம் போன்றே வாழ்வில் வெற்றி பெற தமிழ்10 தளத்தின் வாழ்த்துக்கள்