இவ்வார கிரீடம் பெறுபவர் (28 -09 -09 ) முதல் (04 -10 -09 )

இவ்வார கிரீடம் பெறுபவர் “வன்னி தகவல் தொழில்நுட்பம் ”
தள முகவரி http://vannitec.blogspot.com/
2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் என்னை போன்ற கிராமத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்ற ஒரு குறிக்கோளில்.
3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
வாழ்க்கையே ஒரு விமர்சனம் நிறைந்ததுதான். விமர்சனங்களால் தான் முன்னேறமுடியும்.
4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?
நன்மைகள்:தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்தமை. பதிவுலக நண்பர்கள். இன்னும் பல…
தீமைகள் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
அரும்பு http://muthalarumpu.blogspot.com/
பனையூரான் http://panaiyooraan.blogspot.com/
சூர்யா கண்ணன் http://suryakannan.blogspot.com/
இளவேனில் http://tamilnathy.blogspot.com/
:::TECHNOLOGY::: http://svttechnologya.blogspot.com/
6-இப்போது பதிவுத் திருட்டு சாதரணமாக நடக்கிறது இது பற்றிய உங்கள் கருத்து ? மற்றும் இதை எவ்வாறு தடுப்பது ?
அவ்வாறான பதிவுகளை இடுபவர்கள் அந்த பதிவுகளுக்கு கீழ் அந்த வலைப்பதிவுகளின் பெயர்களை குறித்து நன்றி தெரிவித்தல் நல்லது.
7-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…
ஆம். நிச்சயமாக அதைவிட மிகப்பெரியதொரு சக்தியாக ஊடக உலகில் திகழும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
8-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
சக பதிவர் ஜெயக்குமார் குறிப்பிட்டது போன்று எல்லாப்பதிவர்களும் ஒரு காலத்தில் புதியவர்களே. நானும் ஒரு புதிய பதிவர் தான். இலைமறை காயாக இருக்கும் உங்கள் திறமைகளை வெளிக்கொணர கிடைத்த ஒரு சந்தர்ப்பம். உங்கள் ஆளுமைகளுக்கான ஒரு அரங்கம்.
9 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
எனது பதிவுகளை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதில் ஒரு பெரும் ஊடகப்பங்காளியாக இருந்து எனது திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்10 இணையத்தளத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
பெரிதாக ஒன்றுமில்லை. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியை கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயற்படும் ஒரு கிராமத்து இளைஞன்
போர் மேகம் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறந்து நீங்கள் அறிந்ததை மற்றவருக்கும் அறியும் வண்ணம் பல தொழில் நுட்பப் பதிவுகளை இடும் நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்து இலட்சியங்களையும் வெற்றியாகப் பெற தமிழ்10 தளம் சார்பாக வாழ்த்துக்கள்

