Archive

Archive for November, 2009

தமிழ்10 – இனி நேரடி தமிழ் இணைய முகவரி

November 28th, 2009 4 comments

வணக்கம் தமிழ்10 வாசகர்களே !!!
குறுகிய காலத்தில் உங்கள் ஆதரவால் எம் தளம் பல நாடுகளில் நம்பிக்கைக்குரிய இணையமாக மாறியுள்ளது .புதுப் புது முயற்சிகளை அறிமுகப்படுத்தி வரும் நம் தமிழ்10 தளம் இனி நேரடி தமிழ் இணைய முகவரியிலும் இயங்கும் .அதாவது ஆங்கிலத்தில் www.tamil10.com என்பது போல இனி நேரடியாக தமிழில் www .தமிழ்10.com என்ற முகவரியின் மூலமும் இயங்கும் .இந்த சேவையை தமிழ் திரட்டி(bookmarking ) தளங்களில் முதன் முறையாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் .

மேலும் தமிழ்10 தளத்தில் வரும் செய்தி /இடுகைகளை நேரடியாகப் படிப்பதற்கு (அதவாது முன் பக்கத்திற்குச் செல்லாமல் நேரடியாக செய்திப் பக்கத்திற்கு வருவதற்கு ) www.tamilten.com என்ற முகவரியையும் பயன்படுத்தலாம் .எனவே இன்று முதல் நம் தமிழ்10 தளத்தை உங்களுக்குப் பிடித்த இந்த மூன்று முகவரிகளிலும் பயன் படுத்தலாம்
www.tamil10.com (பொதுவானது )
www.தமிழ்10.com (தமிழ் இணைய முகவரிக்கு )
www.tamilten .com (நேரடி செய்திப் பக்கத்திற்கு )

தமிழ்10 இப்போது புதுவடிவம் & புது வசதிகளுடன் .

November 20th, 2009 No comments

tamil10-changedஎம் தளத்தை மேம்படுத்துவதற்காக பதிவர்களுக்கு சில வசதிகளை நிறுத்தி வைத்திருந்த தமிழ்10 இப்போது முற்றிலும் புது வடிவத்துடன் வந்துள்ளது .சிறப்பு இடுகை & சிறப்பு செய்திகள் என்னும் புது வசதியின் மூலம் பதிவர்களின் முக்கிய மற்றும் வித்தியாசமான செய்திகளை தளத்தின் மேற்பகுதியில் பிரசுரிக்க உள்ளோம் .இதன் மூலம் உங்கள் பதிவு அதிக வாசகர்களை சென்றடையும் .இப்போது வழங்கி உள்ள புது வடிவம் குறித்த விமர்சனங்களை அறிந்தபின்பு நாம் பதிவர்களுக்கு அறிமுகப் படுத்த இருக்கும் மற்ற வசதிகளை அறிவிக்கிறோம் .இப்புது வடிவத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் admin @tamil10 .com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும் .

மேலும் கடந்த ஒரு வார காலமாக பின்னூட்டம் மற்றும் மின் அஞ்சல் மூலமாக எம்மை தொடர்பு கொண்டவலையுலக நண்பர்களுக்கும் , தள மேம்பாட்டின் போது twitter & , தொலைபேசி மூலமாக எம் குறைகளை சுட்டிக்காட்டி பல்வேறு உதவிகளை செய்த அனைத்துப் பதிவர்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

நன்றி
தமிழ் 10 குழுவினர்

பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

November 14th, 2009 11 comments

கடந்த 2 நாட்களாக தமிழ்10.காம் தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்காக முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் .தமிழ்10 தளத்தின் வாசகர்கள் பன்மடங்கு உயர்ந்திருப்பதால் எங்கள் செர்வரை மாற்றியமைப்பதற்கும் , உங்களுக்கு பயன்படும் வகையில் சில புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் நம் தமிழ்10 தளத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம் இப்போது அதன் முதல் நிலை முடிந்து விட்டதால் நீங்கள் பழையபடி பதிவுகளை இணைக்கலாம் .ஆனாலும் நாங்கள் மேம்படுத்தவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை (இன்னும் ஒருவாரத்தில் அது முற்றுப் பெற்று விடும் )

இப்போது நீங்கள் முன்பு போலவே உங்கள் பழைய பயனர் கணக்கின் மூலம் பதிவுகளை இணைக்கலாம் ஆனாலும் அடுத்த ஒரு வாரம் வரை தமிழ்10 காம் சில வசதிகளை நிறுத்தி வைத்துள்ளது அவை

  • உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது எனினும் தள மேம்பாட்டுக்காக அவை அடுத்தவாரம் வரை அவை தமிழ்10 இல் தோன்றாது .

  • உங்கள் தளத்தில் இணைத்திருக்கும் தமிழ்10 ஓட்டளிப்புப் பட்டையும் அடுத்த ஒரு வாரம் வரை உங்கள் தளத்தில் தோன்றாது (நாங்கள் எம் தளத்தை முற்றிலுமாக மேம்படுத்தியவுடன் அவை தானாக உங்கள் தளத்தில் மறுபடி தோன்றும் )

தமிழ்10 தளம் குறுகிய காலத்தில் இவ்வளவு வரவேற்பை பெற்று இருப்பதில் பெரும்பான்மையான பங்கு பதிவர்களாகிய உங்களையே சாரும் .நாம் அறிமுகபடுத்திய ஒவ்வொரு முயற்சியும் வரவேற்ற நீங்கள் தள மேம்பாட்டுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஒருவார கால நேரத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் .
மேலும் தொடர்புகள் மற்றும் விளக்கங்கள் பெற tamil10@ymail.com அல்லது
admin@tamil10.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்
நன்றி

தமிழ் 10 குழுவினர்