Archive

Archive for January, 2010

அதிக ஓட்டுக்கள் பெறுவது மற்றும் தமிழ்10 ன் புது வசதிகள்

January 9th, 2010 2 comments

தமிழ் 10 தளம் ஒவ்வொரு நாளும் traffic மற்றும் புது வசதிகளுடன் மெருகேறி வருவதால் , தமிழ்10 தளத்தில் இணையும் பதிவர்களின் எணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது .புதிதாக இணைந்த பதிவர்களுக்கு ஓட்டளிப்பு முறை மற்றும் அதிக ஓட்டுக்கள் பெறுவது சற்று கடினமான ஒன்றாகும் …எனவே உங்களை கவரும் பதிவுகளுக்கு ஓட்டளிக்கத் தவறாதீர்கள் , முடிந்தால் பதிவுகளுக்கு கீழே உங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லுங்கள் .இதன் மூலம் சக பதிவர்கள் உங்கள் பதிவுக்கு ஓட்டளிக்க முன்வருவர் .


*உங்களின் பதிவுகளை சக நண்பர்களிடம் மின் அஞ்சல் மூலமோ அல்லது சமூக தளங்கள் மூலமோ பகிர்ந்து கொள்ளுங்கள் , பதிவு உங்கள் நண்பர்களை கவரும் பட்சத்தில் உங்கள் பதிவுக்கு வாக்களிக்க முன் வருவர் .

*உங்கள் வாசகர்கள் உங்கள் தளத்தில் இருந்தே வாக்களிக்க தமிழ்10 ஒட்டளிப்புப்பட்டையை இணைத்துக் கொள்ளுங்கள் .

மேம்படுத்தப்பட்ட சுயவிபரம் – Profile

நீங்கள் இது வரை உங்கள் சுய விபரத்தை திருத்தி அமைக்கவில்லை என்றால் இப்போதே உங்கள் சுய விபரத்தை திருத்தி அமைத்துக்கொள்ளுங்கள் .


புதிய மேம்படுத்தப்பட்ட சுய விபரப் பட்டியலில் உங்களின்பட த்துடன் ஓர்குட் , ருவிட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் விபரங்களை இணைத்துக் கொள்ளலாம் ..இதன் மூலம் உங்கள் டிராபிக் அதிகரிப்பதோடு உங்கள் நண்பர்கள் , மற்றும் வாசகர்கள் உங்களை எளிதாக கண்டறிய / தொடர்புகொள்ள / இணைத்துக் கொள்ள முடியும் .அது மட்டும் அல்லாமல் உங்களுக்குப் பிடித்த ஏனைய தளங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும் .

சாட்டிங்

தமிழ்10 வாசகர்கள் மற்றும் , பதிவர்கள் நேரடியாக தமிழ்10 தளத்திலேயே சட் செய்யும் வசதியை இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது .இதற்கு தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை .இதன் மூலம் பதிவர்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களை இலகுவாக ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் .
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் நன்றி .
தமிழ்10.com