Home > சேவைகள் > பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

November 14th, 2009 Leave a comment Go to comments

கடந்த 2 நாட்களாக தமிழ்10.காம் தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்காக முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் .தமிழ்10 தளத்தின் வாசகர்கள் பன்மடங்கு உயர்ந்திருப்பதால் எங்கள் செர்வரை மாற்றியமைப்பதற்கும் , உங்களுக்கு பயன்படும் வகையில் சில புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் நம் தமிழ்10 தளத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம் இப்போது அதன் முதல் நிலை முடிந்து விட்டதால் நீங்கள் பழையபடி பதிவுகளை இணைக்கலாம் .ஆனாலும் நாங்கள் மேம்படுத்தவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை (இன்னும் ஒருவாரத்தில் அது முற்றுப் பெற்று விடும் )

இப்போது நீங்கள் முன்பு போலவே உங்கள் பழைய பயனர் கணக்கின் மூலம் பதிவுகளை இணைக்கலாம் ஆனாலும் அடுத்த ஒரு வாரம் வரை தமிழ்10 காம் சில வசதிகளை நிறுத்தி வைத்துள்ளது அவை

  • உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது எனினும் தள மேம்பாட்டுக்காக அவை அடுத்தவாரம் வரை அவை தமிழ்10 இல் தோன்றாது .

  • உங்கள் தளத்தில் இணைத்திருக்கும் தமிழ்10 ஓட்டளிப்புப் பட்டையும் அடுத்த ஒரு வாரம் வரை உங்கள் தளத்தில் தோன்றாது (நாங்கள் எம் தளத்தை முற்றிலுமாக மேம்படுத்தியவுடன் அவை தானாக உங்கள் தளத்தில் மறுபடி தோன்றும் )

தமிழ்10 தளம் குறுகிய காலத்தில் இவ்வளவு வரவேற்பை பெற்று இருப்பதில் பெரும்பான்மையான பங்கு பதிவர்களாகிய உங்களையே சாரும் .நாம் அறிமுகபடுத்திய ஒவ்வொரு முயற்சியும் வரவேற்ற நீங்கள் தள மேம்பாட்டுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஒருவார கால நேரத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் .
மேலும் தொடர்புகள் மற்றும் விளக்கங்கள் பெற tamil10@ymail.com அல்லது
admin@tamil10.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்
நன்றி

தமிழ் 10 குழுவினர்

  1. தல ரசிகன்
    November 15th, 2009 at 09:45 | #1

    அட விடு வாத்தியாரே ,மன்னிப்புல்லாம் எதுக்கு ? இப்போ தமிழ்ல நியாயமா செய்தி போன்ற சைட் லாம் கொறஞ்சு போச்சு , நீ தான் தெனமும் சரியான நியூஸ் நியூஸ் போன்ற , வேல முடிஞ்சு வந்த ஒடனே இங்க தான் வந்து நாட்டு நிலைமை லாம் பார்ப்பேன் …..௨ நாள் வேல செய்யல இன்ன ஒடனே அடடா இன்னாடா இது , இதுவும் புதினம் மாதிரி ஆயிடிச்சோ ன்னு நெனச்சேன் .நல்ல வேள நெஞ்சில பால வாத்த ..

  2. November 15th, 2009 at 14:25 | #2

    அவசியம். அவசரம். சிறப்பு. வாழ்த்துக்கள்.

  3. November 15th, 2009 at 14:25 | #3

    உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

    இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

    தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

    மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

    தொடர்ந்து வாசிக்க http://deviyar-illam.blogspot.com/

    நட்புடன்

    தேவியர் இல்லம். திருப்பூர்.

    http://deviyar-illam.blogspot.com/

  4. தமிழன்பன்
    November 15th, 2009 at 14:34 | #4

    எப்போதெல்லாம் உங்களுக்கு தடைகள் வருகின்றனவோ , அதை தாண்டி வரும் போது மிகவும் புதுப்பொலிவுடனும் புது முயற்சிகளுடனும் வருவீர்கள் , இப்போதும் அதையே எதிர் பார்க்கிறோம் ….தமிழன்பன் uk

  5. November 16th, 2009 at 05:22 | #5

    இதெல்லாம் பதிவில் சகஜம் மிகவும் புதிய சர்வரோடு புதிய ப்ரோஸசரோடு புதிய எழுச்சியோடு எழுந்து வர வாழ்த்துக்கள்

  6. Athirvin
    November 16th, 2009 at 20:56 | #6

    ஒரு வாரம் தானே வெயிட் பண்ணிட்டா போச்சு

  7. November 18th, 2009 at 01:13 | #7

    தமிழ் 10 புதுபொலிவுடன் வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
    http://beermohamedtamilgroup.blogspot.com

  8. November 18th, 2009 at 01:24 | #8

    தமிழ்10 மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். தமிழ்10 வெர்ட்டிக்கல் ஓட்டுப்பட்டி சரியாக வேலை செய்யவில்லை. தயவுசெய்து கவனிக்கவும். நன்றி

  9. November 20th, 2009 at 04:24 | #9

    அண்ணாத்தே சைட்ல எந்த செய்தியும் பப்ளீஸ் ஆக மாட்டேங்குது. என் சைட்டுக்கு மட்டும் நல்ல விளம்பரம் கொடுப்பதற்கு நன்றி.

    ஏனென்றால் எனது வலைப்பதிவு மட்டும் இரண்டு பிரசுரமாகி இருக்கு….

    தமிழ்10 சேவை வாழ்க….

    மீண்டும் சிறப்பாக செயல்பட

  10. November 20th, 2009 at 06:09 | #10

    மேலும் வளர வாழ்த்துகிறோம்

  11. admin
    November 20th, 2009 at 18:32 | #11

    தமிழ்10 இப்போது புதுவடிவம் & புது வசதிகளுடன் .

    எம் தளத்தை மேம்படுத்துவதற்காக பதிவர்களுக்கு சில வசதிகளை நிறுத்தி வைத்திருந்த தமிழ்10 இப்போது முற்றிலும் புது வடிவத்துடன் வந்துள்ளது .சிறப்பு இடுகை & சிறப்பு செய்திகள் என்னும் புது வசதியின் மூலம் பதிவர்களின் முக்கிய மற்றும் வித்தியாசமான செய்திகளை தளத்தின் மேற்பகுதியில் பிரசுரிக்க உள்ளோம் .இதன் மூலம் உங்கள் பதிவு அதிக வாசகர்களை சென்றடையும் .இப்போது வழங்கி உள்ள புது வடிவம் குறித்த விமர்சனங்களை அறிந்தபின்பு நாம் பதிவர்களுக்கு அறிமுகப் படுத்த இருக்கும் மற்ற வசதிகளை அறிவிக்கிறோம் .இப்புது வடிவத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் admin @tamil10 .com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும் .

    மேலும் கடந்த ஒரு வார காலமாக பின்னூட்டம் மற்றும் மின் அஞ்சல் மூலமாக எம்மை வாழ்த்திய வலையுலக நண்பர்களுக்கும் , தள மேம்பாட்டின் போது twitter & , தொலைபேசி மூலமாக எம் குறைகளை சுட்டிக்காட்டி பல்வேறு உதவிகளை செய்த அனைத்துப் பதிவர்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

    நன்றி
    தமிழ் 10 குழுவினர்

  1. No trackbacks yet.