தமிழ்10 – இனி நேரடி தமிழ் இணைய முகவரி

வணக்கம் தமிழ்10 வாசகர்களே !!!
குறுகிய காலத்தில் உங்கள் ஆதரவால் எம் தளம் பல நாடுகளில் நம்பிக்கைக்குரிய இணையமாக மாறியுள்ளது .புதுப் புது முயற்சிகளை அறிமுகப்படுத்தி வரும் நம் தமிழ்10 தளம் இனி நேரடி தமிழ் இணைய முகவரியிலும் இயங்கும் .அதாவது ஆங்கிலத்தில் www.tamil10.com என்பது போல இனி நேரடியாக தமிழில் www .தமிழ்10.com என்ற முகவரியின் மூலமும் இயங்கும் .இந்த சேவையை தமிழ் திரட்டி(bookmarking ) தளங்களில் முதன் முறையாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் .
மேலும் தமிழ்10 தளத்தில் வரும் செய்தி /இடுகைகளை நேரடியாகப் படிப்பதற்கு (அதவாது முன் பக்கத்திற்குச் செல்லாமல் நேரடியாக செய்திப் பக்கத்திற்கு வருவதற்கு ) www.tamilten.com என்ற முகவரியையும் பயன்படுத்தலாம் .எனவே இன்று முதல் நம் தமிழ்10 தளத்தை உங்களுக்குப் பிடித்த இந்த மூன்று முகவரிகளிலும் பயன் படுத்தலாம்
www.tamil10.com (பொதுவானது )
www.தமிழ்10.com (தமிழ் இணைய முகவரிக்கு )
www.tamilten .com (நேரடி செய்திப் பக்கத்திற்கு )
அடடா இது புது மேட்டர் ஆ இருக்கே ..
நல்ல முயற்சி ……வாழ்த்துக்கள்
தமிழ்ல கூட இன்டர்நெட் அட்ரஸ் இருக்கா? எனக்கு இன்னிக்கு தான் தெரியும் அமர்க்களம் பண்றீங்க போங்க …
தமிழ்10 இன்னும் பல சாதனைகள் புரிய அன்புள்ளத்தோடு வாழ்த்துகிறேன். தாய்மொழிக்கு நாம் செய்யும் தொண்டு நம் தாய்க்கு நாம் செய்யும் உதவியைப் போன்றது.