பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
கடந்த 2 நாட்களாக தமிழ்10.காம் தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்காக முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் .தமிழ்10 தளத்தின் வாசகர்கள் பன்மடங்கு உயர்ந்திருப்பதால் எங்கள் செர்வரை மாற்றியமைப்பதற்கும் , உங்களுக்கு பயன்படும் வகையில் சில புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் நம் தமிழ்10 தளத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம் இப்போது அதன் முதல் நிலை முடிந்து விட்டதால் நீங்கள் பழையபடி பதிவுகளை இணைக்கலாம் .ஆனாலும் நாங்கள் மேம்படுத்தவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை (இன்னும் ஒருவாரத்தில் அது முற்றுப் பெற்று விடும் )
இப்போது நீங்கள் முன்பு போலவே உங்கள் பழைய பயனர் கணக்கின் மூலம் பதிவுகளை இணைக்கலாம் ஆனாலும் அடுத்த ஒரு வாரம் வரை தமிழ்10 காம் சில வசதிகளை நிறுத்தி வைத்துள்ளது அவை
- உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது எனினும் தள மேம்பாட்டுக்காக அவை அடுத்தவாரம் வரை அவை தமிழ்10 இல் தோன்றாது .
- உங்கள் தளத்தில் இணைத்திருக்கும் தமிழ்10 ஓட்டளிப்புப் பட்டையும் அடுத்த ஒரு வாரம் வரை உங்கள் தளத்தில் தோன்றாது (நாங்கள் எம் தளத்தை முற்றிலுமாக மேம்படுத்தியவுடன் அவை தானாக உங்கள் தளத்தில் மறுபடி தோன்றும் )
தமிழ்10 தளம் குறுகிய காலத்தில் இவ்வளவு வரவேற்பை பெற்று இருப்பதில் பெரும்பான்மையான பங்கு பதிவர்களாகிய உங்களையே சாரும் .நாம் அறிமுகபடுத்திய ஒவ்வொரு முயற்சியும் வரவேற்ற நீங்கள் தள மேம்பாட்டுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஒருவார கால நேரத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் .
மேலும் தொடர்புகள் மற்றும் விளக்கங்கள் பெற tamil10@ymail.com அல்லது
admin@tamil10.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்
நன்றி
தமிழ் 10 குழுவினர்


மேலும் சந்தேகம் இருந்தால் admin @tamil10 .com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பவும்


