பதிவர்களுக்கு ரூபாய் 8000 (கூகிள் அட்வேர்ட்ஸ்) மதிப்புள்ள புதிய போட்டி

January 5th, 2012 2 comments

வணக்கம் நண்பர்களே , தமிழ் 10 தளத்தில் பதிவுகளை இணைத்து வரும் உங்களுக்கு இனி தமிழ்10 அடிக்கடி இவ்வாறான போட்டிகளை நடத்தவுள்ளது . ஒவ்வொரு முறையும் போட்டியும் பரிசுகளும் வேறுபடும். இந்த வருடம் முதல் ஆரம்பிக்கும் இந்தப் போட்டியின் பரிசாக 8000 ரூபாய் மதிப்புள்ள கூகிள் விளம்பரக் கூப்பன் இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் (4000 Rs x 2 ) . கூகிள் விளம்பர அட்டைகள் அல்லது கூகிள் அட்வோர்ட்ஸ் ( google adwords ) மூலம் உங்கள் இணையதளத்துக்கு வரும் வாசகர்களை கணிசமான அளவு அதிகரிக்கலாம் . இது பற்றி மேலும் அறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.வெற்றி பெறும் இருபயனர்களுக்கு விளம்பர அட்டையும் , எவ்வாறு உபயோகிப்பது என்பதையும் விரிவாக அனுப்பி வைப்போம் .


கூகிள் அட்வோர்ட்ஸ் பற்றி மேலும் அறிய கீழே உள்ள காணொளிகளை பார்வையிடவும்
Thanjavore Paintings
adwords Introduction

போட்டியில் பங்கு பெற இங்கே செல்லவும்

தமிழ் 10 பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்

November 22nd, 2011 11 comments

தமிழ் 10 தளத்தில் பதிவுகளை இணைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .சமீப காலமாக தமிழ் 10 தளத்தில் நீங்கள் பகிரும் பதிவுகள் மட்டறுத்தலுக்கு உட்படுவதை கண்டிருப்பீர்கள் இது பற்றிய குறிப்பு இங்கே உள்ளது . ஆனாலும் இதில் சில நல்ல பதிவுகளும் மட்டறுத்தலுக்கு உட்பட்டு விடுவதுண்டு .அப்படி உங்கள் பதிவில் எந்தத் தவறும் இல்லாமல் மட்டறுத்தலுக்கு உட்பட்ட பதிவுகள் எம்மால் உடனுக்குடன் பரிசீலிக்கப் பட்டு காத்திருப்பவை பட்டியலுக்கு அனுப்பப்படும் .





ஆபாசப் பதிவுகள் , தனிமனித தாக்குதல் , ஹாக், கண்ணியமற்ற இடுகைகள்

தயவு செய்து நீங்கள் பகிரும் செய்திகளின் தலைப்புக்களை கண்ணியமாக எழுதவும் , அதிக ஹிட்ஸ் பெறுவதற்காக ஆபாச மற்றும் கண்ணியமற்ற தலைப்புக்களை பகிராதீர்கள் . தமிழ்10 தளம் இந்த வயதினர் மட்டுமே படிக்கும் தளம் என்று வரையறுக்கப் படவில்லை . அனைத்து வயதினரும் படிக்கும் இந்தத் தளத்தில் சமீப காலமாக கண்ணியமற்ற பல பதிவுகள் குறிப்பிட்ட சில இணையத் தளங்களால் தொடர்ந்து பகிரப் பட்டு வருகிறது , அதில் ஆபாச வார்த்தைகளே மிகுதியாக இருக்கின்றது .இதனைத் தடுக்கவே நாம் மட்டறுத்தலை கொண்டு வந்தோம் எனினும் இனி மேல் இவ்வாறு தொடர்ந்தும் கண்ணியமற்ற பதிவுகள் அல்லது தலைப்புகளை கொண்டு பகிர்வோரின் கணக்குகள் மற்றும் பதிவுகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம் . பதிவர்களே இது அனைவருக்கும் அல்ல குறிப்பிட்ட சில ஆபாச இடுகைகளை பகிர்வோருக்கு மட்டுமே . மேலும் இது போன்ற ஆபாச பதிவுகளை எம் தளத்தில் காண நேரிட்டால் உடனே எமக்கு இங்கே அறியத் தரவும் .இதன் மூலம் எமக்கு வரும் பதிவுகள் குறைந்தாலும் பரவாயில்லை , கண்ணியமான பதிவுகளை மட்டுமே இணைத்துக் கொள்வோம் .தமிழில் சிறந்த இணையமாக திகழ வேண்டும் என்ற இந்த முயற்சிக்கு நீங்களும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் .
நன்றி

எமக்கு இணைப்பு குடுக்க ( புதிய நிரலி )

November 3rd, 2011 11 comments

நண்பர்களே தமிழ்10 தளத்தில் நீண்ட காலமாக ஒரே வடிவமைப்பில் இருந்த இணைப்புக் குடுக்கும் நிரலியை தற்போது மாற்றி அமைத்து இருக்கிறோம் . எங்கள் நிரலியை இது வரை இணைக்காதவர்கள் கீழே உள்ள code ஐ பயன் படுத்தி இணைத்துக் கொள்ளவும் , எங்கள் நிரலியை ஏற்கனவே பயன்படுத்தும் பதிவர்கள் அதனை அழித்து விட்டு அதற்குப் பதிலாக இந்த புதிய நிரலியை இணைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் நன்றி

இணைப்பு குடுக்க

Tamil10.com

Code :

இணைப்பு குடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்

இது ஓட்டுப் பட்டைகான மாற்று நிரலி அல்ல , எம் தளத்திற்கு இணைப்புத் தரும் நிரலியே ஆகும்